முடிவுக்கு வருகிறது நாடாளுமன்றம்! கோத்தபாயவின் அதிரடி முடிவு...

நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக் குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

இன்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு இன்றிரவு அனுப்புகிறார்.

இலங்கையின் அரசியலமைப்புப்படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகால ஆயுளுடையது. இதன்படி, 2020 ஓகஸ்டில் நாடாளுமன்றம் காலாவதியாகிறது.

19வது திருத்தத்தின்படி நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளில் கலைக்க முடியும். அதாவது 2020 பெப்ரவரியின் பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

எனினும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெருபான்மையின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். இதற்கு வசதியாகவே, ஐ.தே.கவின் சம்மதம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற போதிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை தனது பதவியில் இருக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது.