ஜனாதிபதி தேர்தல் குறித்து பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர வெளிபடுத்திய கருத்து இதோ!

இம்முறை இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மிக அமைதியான முறையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர புள்ளி விபரங்களுடன் ஒப்பிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு இது வரையிலான காலப்பகுதியில் 128 தேர்தல் முறைப்பாடுகளும், 169 தேர்தல் சட்ட மீறல்கள் குறித்த சம்பவங்களும் பொலிஸாருக்கு பதிவாகின. அது தொடர்பில் 141 பேரை நாம் கைது செய்துள்ளோம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நோக்கும் போது, தேர்தல்கள் முறைப்பாடு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு 579 முறைப்பாட்டுப் பதிவுகள் உள்ளன. இவை தொடர்பில் கைதானோர் 384 ஆகும்.

இவற்றை வைத்து நோக்கும்போது இம்முறை தேர்தல் மிக அமைதியாக இடம்பெற்றுள்து என்பதை உறுதி செய்ய முடியும். என்றார்.