வவுனியா மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்

வவுனியா மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச மீது இனந்தெரியாத நபர்கள் இன்று மாலை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், குறித்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் ஐ.தே.க அமைப்பாளர் கருணாதாசவின் வீட்டின் முன்னால் வெடி கொழுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்து வெளியே வந்த அமைப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சிகிச்சை பெற்றுவரும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பி.ஏ. கருணாதாச தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.