அவசரமாக இலங்கைக்குள் அதிரடியாக நுளைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கை வந்துள்ளார்.

இந்த அவசர விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

சீன சார்புடைய ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, அணிசாராத வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிக்குமென நேற்று அறிவித்திருந்தார்.

கோட்டாபய ஜனாதிபதியாகுவதை இந்தியா விரும்பியிருக்கவில்லையென்பதுடன், அவர் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக நேரடியாகவே அதை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கைக்குள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக சென்ற விடயம் புதிய ஜனாதிபதிக்கு கடைசி நேரத்திலே தெரியப்படுத்தியதாகவும் நம்பகமாக அறியக்கிடைக்கிறது.