ரணிலின் முக்கிய முடிவு வெளியானது! பெரு மகிழ்ச்சியில் மகிந்த அணி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியை துறக்க முடிவு செய்துள்ளார்.

நீண்ட இழுபறியின் பின்னர், இன்று இந்த முடிவை பிரதமர் எடுத்தார். நாளை, உத்தியோகபூர்வமாக இதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளிப்பார்.

உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை, தேர்தலிற்கு செல்ல அனேகமான ஐ.தே.க எம்.பிக்கள் விரும்பவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் வரை கோட்டாபய தரப்பு இடைக்கால அரசு ஒன்றை நிறுவ, வசதியாக பதவிவிலக வேண்டுமென கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, நாளை ரணில் பதவி விலகுகிறார்.

நாளைய தினமே மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் என தெரிகிறது.