யாழில் அத்துமீறி நுளைந்த பொலிஸாரை அடித்து விரட்டிய தமிழர்! வெளியான சர்ச்சைக்குரிய காணொளி!

யாழில் அத்துமீறி வீட்டுக்குள் வந்த பொலிஸாரை நபர் ஒருவர் திட்டி வெளியேற்றிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை அருகில் உள்ளவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர்.

யார் வீட்டுக்குள் வந்து பிடிப்பதற்கு அதிகாரம் கொடுத்தது என்று பொலிஸாரை மிரட்டும் தொனியில் நபர் ஒருவர் கேள்வி எழுப்புகின்றார்.

இறுதியில் அந்த இடத்தினை விட்டு பொலிஸார் கலைந்து சென்றுள்ளனர். குறித்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. எதற்காக பொலிஸார் குறித்த நபரின் வீட்டுக்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.