நான்கு மாகாணங்களுக்கு சிவப்பு அறிவித்தல்!!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இன்று மாலை வேளை முதல் கூடிய மழை வீச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த அசாதாரண காலநிலை 4 ஆம் 5 ஆம் திகதிகளிலும் நீடிக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் சில இடங்களுக்கு 100 முதல் 150 வரையிலான மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக மத்திய மலை நாட்டுப் பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியினால், மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், இதனால் தாழ்நிலப் பகுதிகள் பாதிக்கப்படக் கூடும் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.