ரிஷாத்திற்கு காத்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடிகள்! வெளிவரும் பல இரகசியங்கள்..

றிஷாட் MP மீது நான் வைத்துள்ள ஒரு பிடிப்பு காரணமாகவும் அவரது உயிர் பாதுகாப்பு கருதியும் இந்த செய்தியை முகர்ந்து பிடித்து எழுதுகிறேன் என சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாமுடீன் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..

நான் தந்துள்ள செய்தியின் வீரியத்தை யாரும் உணர முடியாத றிஷாட் அணியைப் பார்த்து நான் மிகவும் பரிதாபம் அடைகின்றேன். புரிந்து கொள்ளவும்.

இதுவொரு ஆய்வுச் செய்தி. இந்த செய்தி றிஷாட் MPயை அடைய வேண்டும் அவரது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை எழுதினேன்.

அதேபோல் ஓட்டமாவடி அமீர் அலிக்கு மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வோனஸ் MP மஹிந்த கொடுத்து மறுகணமே அந்த MP யை ராஜினமா செய்யுங்கள் என்று அமீர் அலி MP க்கு போன் போட்டுச் சொன்னேன். காரணம் MP கிடைத்த மைத்திரி அணிக்கு தாவினார்கள்..

கொழும்பில் முஜிபுர் ரஹ்மான் MP மஹிந்தரை அதிகமாக தாக்க வேண்டாம் அடக்கி வாசியுங்கள் என்று இரண்டு தடைவைகள் சொல்லியுள்ளேன்.

காரணம் நான் சரியான பாதையில் ஆய்வில் இருக்கின்றேன் என்பதுதான்.

மற்றது மஹிந்தரின் மீள் எழுச்சியை முகர்ந்து கொண்டோம்..

இவர்களால் ரணிலின் அரசியல் அசைவுகளை எடை போட முடியாமல் போய்விட்டது.

இப்போது றிஷாட் MP மீது 20 குற்றச்சாட்டுகள் எழுத்து மூல முறைப்பாடுகளாக பயங்கரவாதியாக சித்தரித்து இன்று அரங்கேறியுள்ளது.

விசாரணை, கைது, சிறை கோடு என்று மிகப்பெரிய நெருக்கடி பின்னடைவு என்று வரலாம்.

றிஷாட் கட்சியை அமீர் அலி எடுத்துக் செல்ல வேண்டும்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் இவைகள் நடக்க அதிக வாய்ப்பு.

வழக்கு, சிறை,கோடு என்று வந்தால் எதிர் கொள்ளலாம். ஆனால் உயிர் ஆபத்து என்றால் நாட்டை விட்டுச் செல்வது நல்லது.

றிஷாட்டின் வெளிப் பேச்சு சரியில்லை. ரணிலின் தந்திரம் புரியாமல் மீண்டும் சஜித்தை பிரதமராக்குவோம் என்று கொக்கரிக்காமல் மஹிந்தர் பலம் தெரியாது வாயால் வடை சுடக் கூடாது.

ரணிலிடம் பலாத்காரமாக அந்தாளின் விருப்பம் இல்லாமல் அந்தாளின் பதவிகளை பிடுங்கி ஒரு போதும் சஜித்தை பிரதமராக்க முடியாது.

ரணிலின் தந்திரங்களை உங்களால் முறியடிக்க முடியாது.ரணில் ஒரு போதும் சஜித்தை முன்னேற அந்தாள் விடாது.

உங்களைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து விட்டது.

சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்த மகிந்தருக்கு நீங்கள் எம்மாத்திரம்.

சரத்பொன்சேகா செய்த குற்றம் என்ன?

நீங்கள் செய்த குற்றம் என்ன????? இருக்கு....