முல்லைத்தீவு - பரந்தன் பாதையில் பயணிப்போரிற்கு முக்கிய அறிவித்தல்

தொடர்மழை மழை வெள்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் A – 35 பிரதான வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடியில் பாலம் (சுதந்திரபுரம் சந்தி – வள்ளிபுனத்துக்கு நடுவில், வீதி வளைவோடு ஒட்டியிருக்கும் பாலம்) உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

முறுகண்டி அக்கராயன் இணைப்பு வீதியின் முறுகண்டியை அண்மித்த பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து பாதை தடைப்பட்டுள்ளதால்

அவ்வீதியூடாக பயணம் செய்ய தேவையுடைய பயணிகள்

அறிவியல் நகர் பல்கலைகழகம் ஊடாக பொன்னகர் சென்று குறித்த தடைப்பட்ட வீதியில் இராணுவ முகாமிற்கு முன்பாக இணையும் வீதியினூடாக சுலபமாக பயணிக்க முடியும்

தேவையானவர்களிற்கு செயார் செய்து தெரியப்படுத்துங்கள்

அத்துடன் இப்பாதை ஊடாக பயணிக்கும் மக்களை அவதானமாக பயணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினர் மக்களை கேட்டுள்ளனர்.