இலங்கையில் பெண்களை விற்ற அரசியல் பிரபலம் தொடர்பில் வெளியான ஆதாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நடிகை ஜானகி விஜயரத்னவுடன் யசோதரா தேவி போன்ற பௌத்த மதத்துடன் தொடர்புடையவரை அபகீர்த்திக்கு உள்ளாக்கிய குரல் பதிவை சிங்களே தேசிய அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் இந்த குரல் பதிவை வெளியிட்டுள்ளார்.

குரல் பதிவில் ரஞ்சன் பேசியதாவது..

யசோதராவை ஐந்து சதத்திற்கேனும் நம்ப வேண்டாம். யசோதரா என்பவர் தேவுதாத்தின் தங்கை. அவரின் தந்தை மிதோத. யசோதரா சுயநலமிக்கவர்.

சந்திரிக்காவின் தந்தை, பண்டாரநாயக்கவின் தந்தை நேர்தியான வர்த்தகர். அவர் 3000 ஏக்கர் நிலப்புக்கு உரிமையாளராவார். பெண்களை வெள்ளையர்களுக்கு விற்பனை செய்து இந்த நிலங்களை அபகரித்துள்ளார்.

இதன்பின்னர் நான் சிறிசேனவின் வரலாற்றை படித்துள்ளேன். டி.எஸ் சேனாநாயக்க தெற்கிலிருந்து விவசாயிகளை பொலன்னறுவைக்கு அழைத்து சென்றுள்ளார். அதில் ஒருவரே அவரின் தந்தை. அது தொடர்பில் அவர் பல இடங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சத்துரிக்காவின் ஜனாதிபதி தந்தை புத்தகத்தில் தனது தாத்தா தந்தையை தலையில் குட்டியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். கோபமடைந்த தந்தை முழு பயிர் செய்கையையும் தீயிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். அவர் காலையில் ஒன்றையும் மாலையில் ஒன்றையும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒன்றையும் கூறுவார்.

அடுத்தவர் பிரேமதாச, தன்னை பிரபல்யபடுத்திக் கொள்வதற்காக பேராசை கொண்டவர்.