73 கோடி ரூபா மோசடி செய்த வங்கியின் உயர் அதிகாரிகள் கைது

73 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்த செய்த குற்றத்திற்காக கம்பஹா சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைப்பாளர்களினால் வைப்பில் இடப்பட்ட நிதியே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அடுத்தே சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.