கூட்டமைப்பின் தலைவருடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று சந்தித்து பேசினார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.