சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தை தற்போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி என்பதனால் அவரை கைது செய்ய பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்க அதிரடியாகக் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.