கோட்டாபய - மகிந்தவை சந்தித்த அமெரிக்க முக்கிய இராஜதந்திரி

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அலிஸ் வேல்ஸ், இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது “சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தகம், பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மீதான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கிறது.

இவற்றினை மூலம் இரு நாடுகளும் பயனடையும்” என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.