கட்சி உறுப்பினர்கள் ஒருமித்து செயற்பட்டால் மாத்திரமே பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற முடியும்!

ஐ.தே.க வின் தலைமைத்துவம் குறித்து நாளை இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படலாம். அல்லது காலம் தாழ்த்தப்படலாம்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட்டால் மாத்திரமே பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற முடியும். என ஐ.தே.க வின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.தே.க வின் தலைமைத்துவம் குறித்து கட்சிக்குள் மாறுப்பட்ட கருத்துக்கள் பல நிலவுகின்றன. கடந்த வாரம் இடம் பெற்ற செயற்குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டன.

பௌத்த மதத்தினரினதும் நன்மதிப்பினை சபாநாயகர் கரு ஜயசூரிய பெற்றுள்ளார். ஆகவே அவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தினை வழங்க வேண்டும் என மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மறுபுறம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கட்சியின் தமைத்துவத்தினை வழங்கி அவர் தலைமையில் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று பிறிதொரு தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள்.

மறுசாரார் தற்போதைய தலைவர் ரணில் விக்கிமரசிங்க தலைமையிலே கட்சி தொடர்ந்து செயற்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

அனைவரது கோரிக்கைகளுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பிற்கு அமையவும் செயற்பட வேண்டும். கடந்த வாரம் இடம் பெற்ற செயற்குழு கூட்டத்தில் நாளை ( வியாழன் ) தீர்வு எட்டுவதாக குறிப்பிடப்பட்டது. நாளை இது தொடர்பில் தீர்வு எடுக்க முடிந்தால் எடுக்கப்படும் அல்லது தீர்வு காண்பது காலம் தாழ்த்தப்படும்.

கட்சிக்குள் இரகசியமாக எடுக்கப்படும் தீர்மானங்களை தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்ள ஒரு சிலர் பகிரங்கப்படுத்துவது கட்சியின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.

வியாழன் தீர்வு இன்றேல் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள். அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.