கோட்டாபயவிடம் முக்கிய பதவியைப் பெறும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்! அதிர்ச்சியில் சம்பந்தன்

கிழக்கு மாகாண நெடுஞ்சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவராக சாமரா நிலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக ஜே.ஜனார்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாண வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக ஜே.ஜனார்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணித் தலைவராகவும் கடந்த மாகாண சபையில் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராகவும் இருந்தவர் குறிப்பிடத் தக்கது.

அது மட்டுமல்லாது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் மிக நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட இவர் மீது கடுமையாக விமர்சனங்கள் கடந்த மாகாண சபைக் காலத்தில் முன்வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

குறிப்பாக கடந்த மாகாணசபை ஆட்சிக் காலத்தில் சாதாரண அரச நியமனத்திற்கு ஐந்து லட்சம் வரை வாங்கிய மக்கள் வீரன் என குறிப்பிடப்படுகிறது.

அது மட்டமல்லாது பிள்ளையானின் கட்சியில் ஜே.ஜனார்தன் தந்தையார் பிரதேச சபை உறுப்பினராக இருந்த நிலையிலேயே கூட்டமைப்பு அவரிற்கு மாகாண சபை ஆசனத்தை வழங்கியமை குறிப்பிடத் தக்கது.

அப்பாவி மக்களை வைத்து வாழும் நபர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் இருந்தி அழகு பார்க்கும் அவலம் நீங்குமா இனி இது அரச பதவி கட்சியில் நான் இணையவில்லை என இவர் இன்று அறிக்கை வெளியிடலாம் இந்த பதவிகளை ஆழும் கட்சிக்கு வழங்குவதே தற்போதைய அரசின் மரபாக உள்ளது.

மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாத்துவதற்கான அறிகுறி தெரியவில்லை மக்களை யார் காப்பது.