தமிழக ஜல்லிக்கட்டை ரணகளமாக்கிய இலங்கை அமைச்சரின் காளை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காணும் பொங்கலை முன்னிட்டு சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

லங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கிய கடந்த புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் அடக்கினர்.

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் வளர்ப்பு காளை வாடி வாசலை விட்டு வெளியே சீறி வந்தபோது அடக்க முயன்ற மாடு பிடி வீரர் ஒருவரின் கால் சட்டையை கழற்றிவிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு அதன் பின்னர் இயல்பு நிலையில் போட்டி தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகளும், 697 வீரர்களும், பங்கேற்றனர். இந்த போட்டியில், 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டது.