மஹிந்தவின் பெண் பிரமுகரை துாக்கி எறிந்தார் சுமந்திரன்! பற்றிப்பிடித்தார் மாவை

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் விவகாரத்தில் குத்துவெட்டுக்கள் தொடர்ந்தபடியிருக்கின்றன.

மாவை சேனாதிராசாவை வெளியே அனுப்பி, சயந்தன் அல்லது ஆர்னோல்ட்டை உள்ளே கொண்டு வரும் சுமந்திரனின் முயற்சி பிசுபிசுத்ததை தொடர்ந்து, பிறிதொரு நாடாளுமன்ற உறுப்பினரை வெளியில் அனுப்பும் முயற்சியில் சுமந்திரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

உதயன் பத்திரிகை உரிமையாளரும், யாழ் மாவட்ட தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனிற்கு இம்முறை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்காமலிருக்கலாமென எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார்.

இது குறித்து, நேற்று முன் தினம், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் நேரிலும் தெரிவித்தார்.

இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்புரிமையை வகித்து விட்டார், கோட்டாவின் சந்திப்பிற்கு அனுமதியின்றி சென்றார் என்ற இரண்டு காரணங்களின் அடிப்படையில் சரவணபவனிற்கு அடுத்த தேர்தலில் ஆசனம் வழங்கக்கூடாது என எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசாவை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக அந்த தகவல் மூலம் குறிப்பிடுகிறது.

அது குறித்து தெளிவான பதில் எதையும் மாவை சேனாதிராசா வழங்கவில்லை பார்ப்பம் தம்பி இருங்கள் தம்பி என பத்து தம்பிகளை வழமை போன்று அடிக்கியுள்ளார் மாவை.

அது குறித்து ஆலோசிப்போம் தம்பி… அவர் கோட்டாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் போனது மிகப்பெரிய தவறுதான்தம்பி. அவருடன் பேசுவோம் தமபி என மாவை சேனாதிராசா தெரிவித்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, சுமந்திரனின் எடுபிடிகளாக காலடியில் கிடக்கும் சயந்தன் அல்லது ஆர்னோல்ட்டை வெற்றியடைய வைக்க வேண்டுமென்பதற்காக எந்த நகர்வை மேற்கொள்ளவும் சுமந்திரன் தயாராக இருப்பதாக தெரிகிறது.

யாழில் தமிழ் அரசுக்கட்சியிடம் தற்போது வெற்றி பெறக்கூடிய எந்த பெண் வேட்பாளரும் இல்லை. தென்மராட்சியை சேர்ந்த விமலேஸ்வரி என்பவரின் பெயரை அண்மையில் கட்சிக் கூட்டமொன்றில் மாவை சேனாதிராசா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

அவர் தற்போது தமிழ் அரசு கட்சியின் மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். யாழிலுள்ள தமிழ் அரசு கட்சி பெண் உறுப்பினர்களில், முதன்மை தகுதியுடைய பெண்ணாக அவரை கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

எனினும், உடனடியாக நிராகரித்த சுமந்திரன், அந்த பெண் கீதாஞ்சலியுடன் (முன்னாள் மஹிந்த தரப்பு பெண் பிரமுகர்) செயற்பட்டவர் என மறுத்தார்.

இதேவேளை 2015வரை மஹிந்த ராஜபக்ச தரப்பின் மாவட்ட அமைப்பாளராகவும் தேர்தல் காலங்களிலும் போட்டியிட்ட சாணக்கியனை மட்டக்களப்பில் களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கனடா அணி செயற்படுவது எவ்வளவு வேடிக்கை என அங்கிருந்தவர்கள் முனுமுனுத்தனர்.

எனினும், அந்த பெண் கீதாஞ்சலியுடன் செயற்படவில்லை, வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை இவர்கள் களமிறக்கவே மாட்டார்கள், சயந்தனின் வெற்றியை பாதிப்படைய செய்து விடுவார் என்ற ஒரே காரணத்திற்காகவே சுமந்திரன் அப்படி சொன்னார் என தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது.

சயந்தன் அல்லது ஆர்னோல்ட்டின் வெற்றியை பாதிப்படைய செய்யும் வெற்றி வேட்பாளர்கள் யாரையாவது பங்காளிக்கட்சிகளும் களமிறக்கக் கூடாது என்பதிலும் எம்.ஏ.சுமந்திரன் தீவிர அக்கறை காட்டி வருகிறார்.