யாழ் நகரில் சூடுபிடித்த காதல் விற்பனை

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.,

“காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர்.