ஹிஸ்புல்லாவின் நெருங்கிய சகா நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி?

கிழக்கு மாகாணம் உட்பட வடக்கின் மன்னார் வரை வியாபித்திருந்த இஸ்லாமிய தேசம் ஒன்றிற்கான திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் குறித்த தகவல்கள் பல தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் ஒருபுறம் தமிழ் மக்கள் மீதான போருக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக காட்டிக்கொண்டு மறுபுறம் தமது இஸ்லாமிய தேசம் ஒன்றிற்கான கட்டமைப்புக்களை முன்னெடுத்து வந்தனர்.

இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தின் பிரபல அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் தலைமையில் பல குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவும் பெறப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை பெருந்தொகை பணம் கொடுத்து அபகரிப்பது, அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்லாமிய நிர்வாக அலகுகளை உருவாக்குவது, இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் மிகப் பெரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவந்து அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது.

இந்த கிழக்கிஸ்தான் திட்டத்திற்கு எதிராக செயற்படும் முஸ்லீம் தமிழ் குழுக்களை மிரட்டவும், கொலை செய்யவும் மறைமுகமான ஆயுதக் குழு ஒன்றையும் அவர்கள் இயக்கி வந்தனர்.

தீவிர இஸ்லாமிய கொள்கைகளை கொண்டு செயற்படத்தொடங்கிய மேற்படி ஆயுதக் குழுக்களினால் இஸ்லாமிய சரியா சட்டத்திற்கு எதிராக செயற்பட்ட சுமார் 150 ற்கு மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தொண்டு நிறுவனங்களின் பெயர்களில் ஆக்கிரமித்துள்ளனர்.

இவ்வாறு காணிகளை ஆக்கிரமிப்பதற்காக மட்டக்களப்பில் தனியான ஒரு கச்சேரியே இயங்கியுள்ளது.

இந்த காணி அபகரிப்பு கச்சேரியில் பல தமிழ் முஸ்லீம் உத்தியோகத்தர்கள் பகுதி நேரமாக இரவு பகலாக பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு இதற்காக பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மட்டக்களப்பில் உள்ள பிரபல அரசியல் வாதியான ஹிஸ்புல்லாவின் பினாமிகள் 30 ற்கும் மேற்பட்டோர் பெயர்களில் காணிகள் மோசடியாக வாங்கப்பட்டுள்ளன.

இதைவிட ஹிஸ்புல்லாவின் நிறுவனங்களின் பெயர்களிலும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள்வாங்கப்பட்டுள்ளன.