சீனாவில் இன்று வெளியேறியுள்ள 33 இலங்கையர்கள்! இராணுவ முகாமில்

சீனாவின் வுஹான் பிராந்தியத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 33 பேரும் இன்று காலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்கள் இன்று மாலை அளவில் அக்குரேகொட இராணுவ தலைமையகத்தை சென்றடையவுள்ளனர்.

இதன்போது அவர்கள் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வாவை சந்திக்கவுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தமது இருப்பிடங்களை நோக்கி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை தியத்தலாவை இராணுவ மருத்துவமனையில் இருந்து அவர்கள் வெளியேறுவதற்கு முன்னர் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.