பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரின் சகோதரர்! யார் தெரியுமா?

எதிவர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இது குறித்து நோர்வூட்டில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், என் தந்தை மஸ்கெலியாவைச் சேர்ந்தவர், எனவே நான் மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளேன் என்றார்.

loading...