கொரொனா தொற்றுக்கு உள்ளானவர்களை தமிழர் பகுதியில் அனுப்ப யோசனை

தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாந் தீவைப் பயன்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் இந்த தீவு தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக விளங்கியதாக வைத்தியர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார்.

தென் கொரியாவில் இப்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவது அவசியம் என்றும், அதற்கு இந்த தீவு சிறந்த இடம் என்று அவர் கூறினார்.

இந்த தீவு சுகாதார அமைச்சிற்கு சொந்தமானது என்பதால் இது எளிதான பணி என்று கூறினார்.

மட்டக்களப்பு நகரத்தின் மேற்கில் அமைந்துள்ள இந்த தொழுநோய் மருத்துவமனை முன்னர் வெகு பிரபலமானது.

68 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாந்தீவு சுமார் 350-400 நோயாளிகள் தங்க வைக்கப்படும் இடமாக இருந்தது.