சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் யாழ்.மாநகர மேயரின் வீடு?

யாழ்.மாநகரசபை மேயர் ஆனோல்ட்டால் பாசையூரில் சட்டதிட்டங்களுக்கு முரணாக வீடொன்று கட்டப்பட்டு வருகிறது.

சாதாரணமாக கட்டடங்கள் அமைப்பதாயின் மாநகர சட்டதிட்டங்களுக்கு அமைவாக வீதியிலிருந்து 16 அடி அல்லது 22 அடி (நெடுஞ்சாலைகளுக்கு 50 அடி) தள்ளியே அமைக்க முடியும்.

ஆனால் மேயரின் வீடானது இச்சட்ட திட்டங்களுக்கு முரணாக வீதி ஓரத்துடனே கட்டப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இதே பாசையூரில் சட்டதிட்டங்களுக்கு முரணாக அமைக்கப்பட்ட 6 வீடுகளை மேயரின் உத்தரவில் யாழ்.மாநகரசபை இடித்திருந்த நிலையில் மேயர் மாத்திரம் எவ்வாறு சட்டதிட்டங்களுக்கு முரணாக கட்டடம் அமைக்க முடியும்?

வறியவா்களுக்கு ஒரு சட்டம் வசதியானவா்களுக்கு ஒரு சட்டமா என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை வீதியில் வீரமாகாளி அம்மன் கோவில் அருகிலும் யாழ்.மாநகரசபையின் சட்டத்தரணி ஒருவர் சட்டதிட்டங்களை மீறு வீதி ஓரமாக கட்டடம் அமைத்திருந்தார்.

இது தொடர்பில் பலமுறை சபையில் சுட்டிக்காட்டியிருந்த போதும் மேயர் அதை உதாசீனம் செய்ததுடன் பக்கச்சார்பாகவும் செயற்பட்டிருந்தார்.

loading...