ஐ.நாவில் இலங்கை தொடர்பில் இன்று முக்கிய அறிக்கை! தப்பித்துக் கொள்ளுமா கோட்டாபய அரசு?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான வாய்மூலமான விடயங்களை இன்று முன்வைக்கவுள்ளார்.

அது தொடர்பில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன.

மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூலமான முன்வைப்புகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க உள்ளார்.

இதேநேரம், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நாளையதினம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சந்திக்க உள்ளார்.

இதற்கிடையில் இலங்கை இணை அனுசரனை வழங்கிய யோசனைகளிலிருந்து விலகி கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 43 வது கூட்டத்தொடரில நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

40 கீழ் 1, 30 கீழ் 1 மற்றும் 34 கீழ் 1 ஆகிய யோசனைகளிலிருந்து இலங்கை விலகி கொள்வதாக அவர் இதன் போது அறிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ பாரிய அமோக வெற்றியை பெற்று ஜனாதிபதியானதன் பின்னர் நாட்டின் ஒழுக்க விருத்தி உட்பட தேசிய பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

ஒரு தசாப்த காலத்திற்கு முன்னர் அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம்; இராணுவத்தினரால் முற்றாக முறியடிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரிவினை கோரும் வகையிலான நிகழ்வில் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவங்களேனும் இடம்பெறவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்த காலப்பகுதியினில் பெரும்பாலான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன.

மீள குடியமர்த்தல் மற்றும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் இராணுவத்திடம் இருந்த பொதுமக்களின் காணிகள் மீள வழங்கப்பட்டன.

இது தவிர முன்னாள் சிறுவர் ஆயுததாரிகள் உட்பட ஆயுததாரிகள் புனர் வாழ்வளிக்கப்பட்டனர்.

யுத்தம் நடைபெற்ற இடங்களில் தேர்தல்களின் போது வாக்;களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் சட்டம் மற்றும் மனித உரிமைகள் உண்மையிலேயே பேணப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த நிலைமையை அறிய தவறியுள்ளது.

இதன்காரணமாக அரசாங்கம் 40 கீழ் 1, 30 கீழ் 1 மற்றும் 34 கீழ் 1 ஆகிய யோசனைகளிலிருந்து இலங்கை விலகி கொள்ளவுள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, நீதிபதி பரணகம ஆணைக்குழு உள்ளிட்டோரின் விசாரணைகளின் படி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் சுயாதீனம் முற்றாக மீறப்பட்டுள்ளதுடன் யாப்பின் அடிப்படை தன்மை முற்றாக மீறப்பட்டுள்ளது.

31 கீழ் 1 யோசனைக்கான இணை அனுசரனை கடந்த அரசாங்கத்தினால் முற்றாக மீறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை ஆகிய இடங்களில் இதனை வெளிப்படுத்த கடந்த அரசாங்கம் முற்றாக தவறியுள்ளது.

கல்விமான்கள் புத்திஜீவிகள் இராஜதந்திரிகள் பொதுமக்களின் கருத்துக்கள் கூட கவனத்திற்கு எடுக்கப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்ரிபால சிறிசேன இந்த விடயம் குறித்து எவரும் தமது ஆலோசனையை பெறவில்லை என தெரிவித்திருந்தார்.

31 கீழ் 1 யோசனையின் பாரதுரமானதும் சர்வாதிகார தன்மையின் காரணமாக இலங்கையி;ன் வழமையான நடவடிக்கைகளை பாதித்துள்ளதுடன் அது தேசிய சேவையினை பாரியளவில் பாதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

loading...