இலங்கையில் இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானிய ஊடகவியலாளருக்கு நேர்ந்த பரிதாப நிலை!

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இலங்கை இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளளர் ஜோன் ஸ்னோ கொரோனோ தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல போர்க்குற்றங்களை சனல் 4 தொலைக்காட்சி பகிரங்கப்படுத்தியிருந்தது.

அந்த தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ தயாரித்த Sri Lankan Killing Fields ஆவணத் தொகுப்பை இலங்கையை மட்டுமல்ல, உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

ஈரானின் தேர்தல் குறித்த பணிக்காக சென்றிருந்த ஜோன் ஸ்னோ கடந்த வாரம் பிரித்தானியா திரும்பியிருந்தார். எனினும், இன்னும் அவர் இன்னும் பணிக்கு திரும்பவில்லை.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

loading...