கொரோணா தொற்றுக்கு உள்ளான பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை

சுவிசிலிருந்து இலங்கை சென்று வந்த மத போதகருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டு , சுவிசின் தலைநகரான பேர்ண் மாநில இன்சல் யுனிவர்சிட்டி வைத்தியசாலையின் https://www.insel.ch/கொரோணா தொற்று நோய் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத் தகவல் சுவிஸ்லாந்து அரசிடம் இருந்து இலங்கை தூதரகம் ஊடாக கிடைக்கப் பட்ட தகவல் வடக்கு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது கொரோணா தொற்றுக்கு உள்ளான பாஸ்டர் வசிக்கும் சுவிசின் தலைநகரான பேர்ண் மாநிலத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் தனது முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதித்து கொடுக்கப்படும் மருத்துவ சான்றிதழ் ஒருவருக்கு காச்சல் இருக்கிறதா என கொடுக்கப்படும் சான்றிதழே தவிர , கொரோணா இல்லை எனக் கொடுக்கப்படும் சான்றிதழ் அல்ல.

ஐரோப்பிய நாடுகளில் கூட ஒருவருக்கு கொரோணா இருக்கிறதா என பரீட்சிக்க எடுத்துக் கொள்ளும் காலம் , ஆகக் குறைந்தது 2-3 நாட்களாகும். அதன் பின்னரே உறுதி செய்ய முடியும்.

அவருக்கு ஓரளவு காச்சல் இருந்ததாக கொடுக்கப்பட்ட சான்றிதழில் உள்ளது. அன்று அது கொரோணா என நினைக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த சான்றிதழ் , கொரோணா இல்லை என அத்தாட்சிப்படுத்தபட்ட சான்றிதழ் அல்ல.

இத்தாலியில் இருந்து சென்ற இருவர் பெணடோலை எடுத்துக் கொண்டு விமான நிலையம் ஊடாக சென்றதால் காச்சல் இருந்ததைக் கூட கட்டுநாயக்காவில் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு பின்னர் கொரோணா இருந்து , தற்போது அங்கொடை ஐடிஎச்சில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சுவிசிலிருந்து சென்றவரை யாழில் சந்தித்த 4 பேருக்கு கொரோணா தாக்கம் இருப்பதான சந்தேகம் வந்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. அதில் நிச்சயிக்கப்பட்ட ஒருவர் தற்போது அங்கொடை ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே மதவாதங்களை விட்டு நோய்வாதங்கள் பரவாமல் தற்காத்துக் கொள்ள முயலுங்கள். மற்றவர்களையும் பாதுகாக்க முயலுங்கள்.