இத்தாலியில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்செல்வதற்கு உதவும் இளம் குடும்பம்! ஆபத்திலும் இப்படி ஒரு மனிதம்...

நான் ஷிஹாம் இது என்னுடைய கணவர் பாரூக் நாங்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள்.

உலக அளவில் எங்கள் நாட்டிலேயே அதிக அளவு கொரோனாவால் 50,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்னும் வந்து கொண்டேதான் இருக்கிறது, அதேபோல் இறப்பும் அதிக அளவில் நடந்த வருகிறது, எங்களால் முடிந்த ஒரு சிறு உதவியாக இறந்தவர்களின் சடலங்களை வேனில் எடுத்து செல்லும் பணிகளை நாங்கள் செய்கிறோம்.

எனக்கும், என் கணவருக்கும் எந்த பாதிப்பும் வரமால் உங்கள் பிரார்த்தனையில் எங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள் ஷிஹாம் முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று மாலை நிலவரப்படி 8 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 5 ஆயிரத்து 598 பேரை இந்த கொடிய வைரஸ் தாக்கியுள்ளது இப்படி இருக்கையில் இவ் இளம் குடும்பத்தின் மனித நேயப் பணி பாராட்டுக்குரியது என மக்கள் கூறுகின்றனர்.

loading...