இலங்கையில் 800 கிலோ கத்தரிக்காய் - தக்காளிகளை பிடுங்கிவைத்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் விவசாயிகள்!

நேற்று மதியம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பற்றி அறியாத நெடுங்கேணியை சேர்ந்த விவசாயி 800 கிலோ கத்தரிக்காயை பிடுங்கிவைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாதிருந்தார்.

அதேபோல யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறுவடைக்குத் தயாரான தக்காளி பழங்களை மரத்திலும் விட முடியாமல் பிடுங்கி வீட்டில் வைத்திருக்கிறார்.

இந்த அவசரநிலைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இது. மரக்கறியின் பருவகாலம் இதுவென்பதால் அறுவடையும் ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்தையில்லை.

ஏற்கனவே பல்வேறு சிரமங்களின் மத்தியில்தான் விவசாயிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இப்போது உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பும் இல்லாமல் போயிருக்கிறது.

எனவே அரசு இதில் கவனம் செலுத்தவேண்டும். மானிய விலை அடிப்படையிலாவது இப்பொருட்களை கிராமமட்ட அமைப்புக்கள் ஊடாக கொள்வனவு செய்து சதொசா போன்ற அரச வணிக கடைகள் ஊடாக விற்பனை செய்யலாம்.

loading...