இலங்கையின் அனைத்து மத்திய வங்கி கிளைகளிடமும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்!

அரசாங்கத்தினால் தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் நாளை காலை 10 மணி வரையில் மாத்திரம் அனைத்து மக்கள் வங்கி கிளைகளையும் திறக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைத்து மத்திய வங்கி கிளைகளிடமும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இவ்வாறு மக்கள் வங்கி திறக்கப்பட உள்ளது.

வங்கியினால் ஒவ்வொருவருக்கு இடையிலும் குறைந்தது ஒரு மீட்டர் அளவு இடைவெளி வைக்குமாறும் வங்கி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளை கடைபிடிக்குமாறு மக்கள் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

loading...