காலையில் இருந்து கடைகளில் அலைமோதும் யாழ்ப்பாண மக்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதுகின்றனர்.

மாவட்டத்திலுள்ள அனைத்துச் சந்தைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். எனினும் பல்பொருள் அங்காடிகள்,வங்கிகள், மருந்தகங்களில் பொலிஸாரின் அறிவுறுத்தலில் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீற்றர் இடைவெளியில்ல வரிசையில் காத்திருக்கின்றனர்.

வீதி ஒழுங்குகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையிலும் நகரங்களில் வாகன நெரிசல் காணப்படுகிறது.

பொதுச் சந்தகைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.