இத்தாலி நாட்டிலிருந்து இலங்கைக்குள் நுழைந்த 12 பேரை தீவிரமாக தேடும் காவல்துறையினர்!

இத்தாலி நாட்டிலிருந்து இலங்கைக்குள் நுழைந்து தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படாமலிருக்கும் 12 பேருடைய பெயர் மற்றும் புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டிருக்கின்றது.

இவர்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், குறித்த நபர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் 119 அல்லது 0718591864, 0112444480, 0112444481 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு இலங்கை காவற்துறை பொது மக்களை அறிவித்துள்ளது.