சுகாதார அமைச்சின் கோரிக்கை

உலகளாவிய ரீதியாக பரவிச் செல்லும் கொவிட் 19 வைரஸிலிருந்து சிறார்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ளது.

அத்துடன் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், குழந்தைகள் மேம்பாட்டு மையங்கள், ஆரம்ப கால பருவ வளர்ச்சி மையங்கள் என்பவற்றில் உள்ள சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என அந்த அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

loading...