கொரோனா வைரசின் தாக்கம்... சிறையில் சிக்கி தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள்!

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கு பல நாடுகள் திட்டமிட்டுவருவது ஒருபுறம் இருக்க சில நாடுகள் கைதிகளை விடுதலை செய்துள்ளன.

ஈரான் 85,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளதுடன், 10,000 பேருக்கு பொதுமன்னிப்பும் வழங்கியுள்ளது. எதியோப்பியா 4,000 கைதிகளை விடுவித்துள்ளது.

தற்போது சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பிரித்தானியா அரசும் சிந்தித்து வருகின்றது.

எனவே சிறீலங்கா அரசினால் எந்தவித குற்றமும் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.