சதோச மற்றும் பிக் மீ இணைந்து அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம்

அத்தியாவசிய பொருட்களை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு சதோச நிறுவனம் மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.பிக் மீ (Pick Me) நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சதோச நிறுவன தலைவர் நுசாத் எம்.பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டமானது கொழும்பை மையமாக கொண்டு நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (26) முதல் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.