செல்வி அம்பிகாவிற்காக அமைச்சருக்கு கடிதம் எழுதிய சுமந்திரன்

கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மூத்த தலைவர்கள் அனைவரையும் சுமந்திரன் முட்டாள் ஆக்க ஆரம்பித்து விட்டார்.

வரலாற்றில் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் அவலங்கள் மற்றும் ஒடுக்கு முறை தொடர்பில் ஒரு கடிதம் எழுதாத செல்வி அம்பிகா சற்குணநாதன் தற்போது மட்டும் கடிதம் எழுதி உள்ளாராம் இதை மக்கள் நம்ப வேண்டுமாம்...

மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ கூட்டமைப்பின் தலைவர்கள் ஆ... ஊ... என நல்ல அறிக்கை.. மிக அருமை... இப்பயானவர்கள் தேவை என கதை விட்டு தமிழ் இனத்தை அழிப்பதற்கு துணை போவதாக மக்கள் கவலை வெளியிட்டள்ளனர்.

அது மட்டுமல்லாது இவர் எழுதிய கடிதம் அரசியல் கைதிகளிற்கு அல்ல மாறாக திருட்டு மற்றும் சிறு குற்றங்களுடன் உள்ளவர்களை விடுதலை செய்யும் படியே கூறியுள்ளார்.

அரசியல் கைதிகள் என்பதை ஏன் என்றால் எழுதவில்லை இவர் சுமந்திரனால் வழிநடத்தப் படுவதுடன் இக் கடிதத்தை செல்வி அம்பிகாவின் பெயரில் எழுதியவரும் செல்வி அம்பிகாவின் அரசியல் விடிவுக்காகப் போராடும் சுமந்திரன் என தமிழரசுக் கட்சியின் முக மூத்த சிரேஸ்ர தலைவர் தெரிவித்துள்ளார்.

நம்மட சுமந்திரனின் விளையாட்டுகளை மாவை அண்ணன் சம்பந்தன் ஐயா கண்டு கொள்வதில்லை அதனால தம்பியின் வேகம் இனி வரும் காலங்களில் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர போன்றவர்களும் சிங்கள வாக்கை நாம் எடுத்து சர்வதேசத்திற்கு காட்ட இது சிறந்த சந்தர்ப்பம் எமது இராஜதந்திரத்தை காட்ட திருகோணமலை மற்றும் வவுனியாவில் இருவரையும் களம் இறக்கலாம் ஏன் என்றால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிங்கள படம் மற்றும் நாடகங்கள் பார்ப்பதால் அவர்களுக்கும் இவர்களை ஓரளவு தெரியும் என சுமந்தின் சொல்வதற்கு காலம் செல்லாது.

செல்வி அம்பிகாவிற்கு இவ்வளவு பரந்த அறிவு இருந்திருந்தா இவ்வளவு காலமும் என்ன கொழும்பில் குப்பையா கொட்டினார் அந்த பிள்ளை அவுஸ்திரேலியா போயிற்று இந்த தேர்தலும் வேண்டாம் இந்த அரசியலும் வேண்டாம் என

சுமந்திரன் வலு கில்லாடி அரசியலே வேண்டாம் என அறிக்கை விட்டு விட்டு போன பிள்ளைக்கே தெரியாமல் பிள்ளை அம்பிகாவிற்கே விருப்பம் என நம்மட கட்சிக் காரர்களையும் முழு ஊடகத்தையும் நம்ப வைத்து ஏமாற்றினார் அவர் சிறந்த சட்டத்தரணி அல்லவா எப்படி இருக்கும் மூளை...

நேற்று இவ்வளவு அக்கறையா அரசியல் கைதிகளிற்கு கடிதம் எழுதியது இந்த கடிதம் அந்த பிள்ளைக்கு தெரியுமோ தெரியாது இது இந்த சுமந்திரனின் வேலை...

இப்ப விளங்குதா சுயமா சிந்திப்பவர்களை சுமந்திரன் விரும்பாது தனது விருப்பத்தை விரும்புபவர்களை மட்டும் தான் நம்மட சுமந்திரன் விரும்புவார்...

தம்பி பிரபாகரனின் போராட்டத்தில் எத்தனை பெண்கள் இன்றும் வீர பெண்களாக வரலாற்றில் உள்ளனர் அப்படி வீரம் விளைந்த மண்ணில் எப்படி மீண்டும் ஒரு போராட்டம் வளரக் கூடாது என்பதில் தென்னிலங்கை குறியாக உள்ளது உங்களுக்கு தெரியும் தானே... அது எதிரியின் கொள்கை அது சரி...

அதற்கு நிகராக நம்பட சுமந்திரன் அடுத்த தமிழ் இன அழிப்பில் இரகசியமாக இன்றும் வடக்கு - கிழக்கில் எத்தனை ஆளுமை மிக்க பெண்கள் இருக்கையில் தம்பி சுமந்திரன் கிழக்கிற்கும் கொழும்புதான்... வடக்கிற்கும் கொழும்புதான்.... இவர்களிற்கு அவர் கூறும் அடை மொழி மனித உரிமை அந்த உயரிய சொல்லிற்கே... நான் சொல்லவில்லை என ஐயாவின் வாய் விட்ட சிரிப்பு....

இப்ப தம்பி தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகும் பெண்களை தெரிவு செய்யும் பொறுப்பை சம்பந்தன் ஐயா தம்பி சுமந்திரனிடம் கொடுத்து விட்டார்.

காரணம் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறு நாள் கதிர்காம முருகன் கனவில் தோன்றி இந்த விடயத்தை கூறியதாக நம்பட துரைரெட்ணசிங்கம் முன்னாள் எம்.பி கூறினார்.. காரணம் அவருக்கும் இப்படி ஒரு அதிசய கனவு இரகசியம் உள்ளது. என கதைத்தபடி முருகன் என்றால் சும்மாவா சிரித்தபடி வாயைத் துடைத்தார்.

என்னத்தை சொல்வது கட்சி அழிந்து விட்டது சம்பந்தன் ஐயாவை விடுங்கள் மாவை அண்ணன் இருக்கிறாரே மிக நல்ல மனிதன் ஆனால் இப்படி ஒரு செக்குலக்கையை நான் வாழ்க்கையில் காணவில்லை ..

காரணம் சுமந்திரன் மாவை அண்ணனின் அரசியலை அழிக்க வேண்டும் என ஒத்தைப் பிடியில் நிக்கிறான் இந்த மாவை வரிக்கு... வரி... சுமா.. சுமா...

அதான் அண்டு நடு யாழ்ப்பாணத்தில எவ்வளவு மதிப்பு மிக்க மாவையை வேண்டும் என திட்டமிட்டு ஆட்களை வைச்சி துயில் உரிஞ்சது.

சுமந்திரனில் உள்ள நல்ல குணம் தண்ட காரியம் முடியனும் என்றால் ஆபத்தில் தண்ணீர் கொடுத்தவர் கழுத்தை கூட அறுக்க துணிவார் நான் தம்பி பிரபாகரனுடன் எல்லாம் எவ்வளவு பழகியுள்ளேன் இப்படி குணம் தம்பியிடம் கூட இல்லை...

இதுக்கு மேல என்னால கதைக்க முடியாது கொரோனா என்ன கொரோனா சுமந்திரனின் கொரோனாவில் இருந்து கட்சி தப்பாது...! கொரோனாவை ஒரு நாட்டு தலைவன் எவ்வளவு ஆளுமையா கையாள்கின்றார்...!!! நம்மட தலைவர் மாவை சுமந்திரனின் கொரோனாவிற்கு சுமந்திரனிடம் மருந்து கேட்டால் விரைவில் மாவை அண்ணனிற்கு சுமந்திரன் கொரோனா வைத்தியம் பார்ப்பார் போல தெரியுது.

என்னவே செல்வி அம்பிகாவிற்காக சுமந்திரன் எழுதிய கடிதத்தை இந்த குழப்பத்தில மறந்திராதங்க இவ்வளவு விளக்கமா எல்லாம் பிள்ளை அம்பிகா கடிதம் எல்லாம் எழுதாது அது யாழ்ப்பாணம் என்றதுக்கு என்ன போன மாதம் தான் பிறந்ததற்கு நான்காவது முறை வந்தது என கூறிய படி யாரோ இடையில் கதையை நிறுத்தி விட்டார் ஐயா ஏதோ கூற வந்தார் பாப்பம் மீண்டும் அவருடன் கதைப்பம்......

  • செல்வி அம்பிகாவின் பெயரில் சுமந்திரன் வடிவமைத்தை அரசியல் கைதிகள் அல்லாதவர்கள் மீதான கரிசனைக் கடிதம்..........

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இன்றியைமையாததாகச் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதைப் பற்றியும் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பது பற்றியும் கலந்துரையாடுவதற்குக் குழு ஒன்றினை நியமிப்பது பற்றிய அறிவித்தலை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செல்வி அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா , சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தென்னகோன் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோருக்கும் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

போதிய தனிநபர் துப்பரவு வசதிகளும் சுகாதார வசதிகளும் இன்றி அளவுக்கதிகமான கைதிகளுடன் சிறைச்சாலைகள் நெரிசல்மிக்கவையாகக் காணப்படுகின்ற காரணத்தினால் கொவிட் 19 இனால் தொற்றுக்குள்ளாகும் அதிக சாத்தியப்பாட்டினை கைதிகள் கொண்டுள்ளனர்.

இவ்வாறான நெரிசல்மிக்க சிறைச்சாலைகளில் நபர்களுக்கிடையில் போதிய அளவு தூரத்தினைப் பேணுவதும் சவர்க்காரமும் தண்ணீரும் கைதிகளுக்குத் தாராளமாகக் கிடைக்காத காரணத்தினால் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுவது உள்ளிட்ட பொதுவான தடுப்பு நடவடிக்கைகளைக் கைதிகளினால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது.

மேலும் சிறைச்சாலைக்குப் பணியாளர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்ற காரணத்தினால் சிறைச்சாலையினை மூடிவிடுவதும் சாத்தியமற்றதாகும். கொவிட் 19 தொற்று ஏற்படுவது பற்றிச் சிறைக்கைதிகள் மத்தியிலும் பணியாளர்கள் மத்தியிலும் காணப்படும் அச்சத்தினை விலக்குவதற்கு சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதும் ஏனைய நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். இவ்வாறான அச்சங்கள் பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்குக் காரணமாகியுள்ளதுடன் அநுராதபுரச் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டினால் மரணங்கள் ஏற்படுவதற்கும் கைதிகளுக்குக் காயங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது.

மேலும் இந்தியா, கொலம்பியா மற்றும் இத்தாலி போன்ற ஏனைய நாடுகளிலும் கொவிட் 19 காரணமாக அமைதியின்மையும் மரணங்களும் சம்பவித்துள்ளன. சிறைச்சாலைகள் தொற்றுப் பெருகும் இடங்களாக மட்டுமன்றி அமைதியின்மையும் வன்முறையும் பரவக்கூடிய இடங்களாகவும் மாறும் சாத்தியத்தினையே இது குறிக்கின்றது.

இலங்கையின் கைதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் விளக்கமறியற் கைதிகள் என்பது எமக்குத் தெரியும். மேலும் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளில் மிகப் பெரும்பான்மையானோர் தமது அபராத தொகையினைச் செலுத்தத் தவறியவர்;களாகவே உள்ளனர். சிறிய குற்றங்கள் மற்றும் பிணை வழங்கப்படக்கூடிய குற்றங்களுக்குப் பிணை வழங்க மறுப்பதும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யத் தவறுகின்றமையும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கும் முடிவதற்கும் நீண்ட காலம் காத்திருப்பதுமே சிறைச்சாலைகள் நெரிசல் மிக்கவையாக மாறுவதற்கான காரணங்களாகும்.

'வீட்டு விடுப்பு' மற்றும் 'உரிமத் திட்டம்' போன்ற தற்போதுள்ள திட்டங்கள் நன்கு பயனளித்துள்ளதெனச் சிறைச்சாலைத் திணைக்களப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இவற்றினை அமுல்படுத்துவதில் காணப்படும் அரசநிர்வாகத் தாமதங்கள் தீர்க்கப்படவேண்டும்.

கொவிட் 19 தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்காகச் சிறைக்கைதிகளை விடுவிக்குமாறும் இது தொடர்பிலான குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையிலும் எடுக்கப்படலாம் என்றும் ஜனாதிபதியிடமும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடமும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு மார்ச் 16 ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தது.

இது உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என நாம் எதிர்பார்ப்பதுடன் மார்ச் 26 ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள கூட்டத்திற்கு முன்னர், சிறைக்கைதிகளின் விடுவிப்பிற்கான பூரணமான தெரிவடிப்படையினை உருவாக்குவதற்காக நாம் சில மேலதிக ஆலோசனைகளையும் பகிர விரும்புகின்றோம்.

குறிப்பாகக் கடுமையான நோய்களினால் அல்லது மரணத்தினை ஏற்படுத்தும் முற்றிய நோயினால் வருந்துபவர்களின் பாதிப்புறுநிலையினையும் முதியவர்களின் பாதிப்புறுநிலையினையும் தமது தாய்மார்களுடன் சிறைச்சாலையில் வாழும் பிள்ளைகளின் பாதிப்புறுநிலையினையும் உங்களின் கூட்டத்தில் பரிசீலிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்கும் கொவிட் 19 தொற்றினைத் தடுப்பதற்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பிணை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளைப் பரிசீலித்து அமுல்படுத்துமாறு நாம் கௌரவ நீதி அமைச்சரின் தலைமையிலான நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குற்றச்செயல்களின் தீவிரம் மற்றும் தன்மை ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு, தற்போதுள்ள நடவடிக்கைகளுடன் விசேட நீதிமன்ற விசாரணைகள், நிர்வாக மீளாய்வுகள் மற்றும் பொருத்தமானபோது ஜனாதிபதியின் மன்னிப்பு போன்ற விசேட அவசர நடவடிக்கைகள் இணைந்த பரிபூரணமான அணுகுமுறைக்கான வேண்டுகோளை நாம் விடுக்கின்றோம்.

இச்செயல்விதிகளை அமுல்படுத்துகையில்,

வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக, விடுவிக்கப்படவுள்ள சிறைக்கைதிகளைத் தெரிவுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் தெரிவடிப்படையினையும் அவ்வாறு விடுவிக்கப்படவுள்ள ஒவ்வொரு வகையிலுமான சிறைக்கைதிகளின் எண்ணிக்கையினையும் பகிரங்கப்படுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.