இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை 113 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் கொரோனாவினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இன்றையதினம் மாத்திரம் இலங்கையில் 7பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் 9 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.