சீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்!

இலங்கையில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக சீனாவில் உள்ள இலங்கையர்கள் 10ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர்.

சீனாவின் குவாங்சோ மற்றும் ஷாங்காய்க்கான இலங்கை தூதுவரின் உதவியுடன் இந்த உதவிப்பொருட்கள் ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ்சுக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவிப்பொருட்களில் முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கையுறைகள், விசேட கண்ணாடிகள், வெப்பமானிகள், ஒக்சி மீட்டர்கள், குளுக்கோமீட்டர்கள், நெபுலைசர்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

இதேவேளை இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சீனாவிலிருந்து 35பொதிகளில் 501கிலோகிராம் எடையுடைய மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சீனாவில் உள்ள இலங்கையர்களின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் கொரேனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை தேசிய சுகாதார பிரிவினரிடத்தில் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.