கொழும்பில் வாகனத்தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

கொழும்பு மாநகரசபையின் நிர்வாகத்திற்கு கீழ் உள்ள வாகனத்தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாநகரசபையின் ஆணையாளர் சட்டதரணி ரோஹிணி திசாநாயக்க தெரிவிக்கிறார்.

இதன்படி, வேன்,கார் வாகனங்களுக்கு மணித்தியாலயத்திற்கு 50 ரூபாவும், மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டிகள் ஆகியவற்றிற்கு மணித்தியாலயத்திற்கு 20 ரூபாவும் அறவிடப்படும்.

அதேவேளை, பாடசாலை பஸ்களுக்கு 1000 ரூபாவும், வேன்களுக்கு 600 ரூபாவும் மாதாந்த கட்டணமாக அறவிடப்படும். அரசாங்க ஊழியர்களுக்காக போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் பஸ்களுக்கு 2000 ரூபாவும், வேன்களுக்கு 1200 ரூபாவும் மாதாந்த கட்டணமாக அறவிடப்படுமென மாநகரசபையின் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.