சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்திற்கு அமைச்சர் ஆலோசனை

சுற்றுலாத்துறை வழிகாட்டிகள் மற்றும் சாரதிகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவற்றில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலா துறை வழமைக்கு திரும்பியதும் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பதிவு செய்யாத வழிகாட்டிகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.