ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் உள்ளக களஞ்சிய வலையமைப்பு மீது சைபர் தாக்குதல்

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு வலையமைப்பிற்களில் முதன்மை வகிக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் உள்ளக களஞ்சிய வலையமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த சைபர் தாக்குதலை அடுத்து டெலிகொம் நிறுவன வாடிக்கையாளர் சேவை உட்பட பலதரப்பட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெலிகொம் நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்தே பணிசெய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், தனிப்பட்ட கணணிகளில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, சொட்நொகிப் என்கிற கப்பம் கோரும் இணைய மென்பொருளைப் பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.