டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக காணப்படும் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஏழு இடங்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்கள், வைத்தியசாலைப் பணிப்பாளர் மாகாண வைத்திய அதிகாரிகளை கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் சந்தித்து சுகாதார நிலமை தொடர்பில் கேட்டறிந்தார்.

இதன்போதே மருத்துவர் ஒரவரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியசாலையில் டெங்கு பெருக்கத்துக்கான இடங்கள் காணப்படுகின்றன. அங்கிருந்து டெங்கு நோயாளரும் இனம் காணப்பட்டுள்ளதோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் டெங்கால் பீடிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

மாவட்ட பூச்சியல் ஆய்வு பிரிவினர் வைத்தியசாலையில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இந்த விடயம் உறுதி செய்யப்படுகின்றது என்றார்.

இது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.