தமிழ் மக்களின் சொத்துக்களை ஆழித்தவர்கள் இவர்கள்தான்... அம்பலப்படுத்திய விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே வடக்கு மற்றும் கிழக்கில் போரை தீவிரப்படுத்தி தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தார்கள் என முன்னாள் கல்வியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “போரினால் பாதிக்கப்பட்டு காணப்படுகின்ற வடக்கு- கிழக்கை சிறந்த அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

அதாவது வடக்கில் போரை தீவிரப்படுத்தி அங்குள்ள மக்களின் சொத்துக்களை அழித்தவர்கள்தான் தற்போது நாட்டை கைப்பற்றியுள்ளனர். ஆகவே அவர்கள்தான் வடக்கு- கிழக்கினை சீர்செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.