இலங்கையில் முகக்கவசம் அணியத்தவறிய 1,280 பேருக்கு நேர்ந்த நிலை!

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாது பொது இடத்தில் நடமாடிய ஆயிரத்து 280 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் காணப்படும் நபர்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்ற நடைமுறையை பொலிஸ் தலைமையகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிவரை ஆயிரத்து 280 பேர் முகக்கவசம் அணியாத குற்றத்துக்கு வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.