பிள்ளையான் குழு மங்களாவை அவரின் உறவினர்களே ஏசிக்கலைக்கும் வீடியோ!!

மட்டக்களப்பில் பிள்ளையான்குழுவில் போட்டியிடும் மங்களேஸ்வரியை அவரின் சொந்த ஊரான முனைக்காட்டிலேயே அவரது உறவினர்கள் ஏசிக் கலைத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

'எங்கட பிள்ளைகளை கொலைசெய்த கொலைகாரனுடன் கூட்டுச்சேர்ந்து வோட்டு கேட்க வாறியா' என பல வீடுகளில் மங்களேஸ்வரியை ஏசிக்கலைத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த நிலையில் மங்களேஸ்வரி மட்டக்களப்பு நகரை அண்டிய மாடடிக்கும் முனையில் உள்ள அவரின் வீட்டில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

மங்களேஸ்வரியின் சொந்த ஊரான முனைக்காடு கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள அவரின் சொந்தகாரர்களே அவருக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தேர்தலுக்கு முன், மங்களா தனது சொந்தக்காரர்களையே, சொந்தக்காரர்கள் என்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வெட்கப்பட்டவர், சொந்தக்கார்களையே அக்கா, அண்ணா, மாமி, மச்சான் என்று முறை சொல்லி அழைக்க வெட்கப்பட்டவர், இன்று , வீடு வீடாக சென்று முறை சொல்லி அழைத்து வாக்கு கேட்பதை எண்ணி மங்களாவின் ஊரவர்கள் சிரிக்கிறார்கள்.

மங்களா, தனது சொந்த காரர்களை வீதியில் கண்டால் கூட, கண்டும் காணாததை போல் சென்ற காலம் போய், தற்போது கொழும்பில் இருந்து வந்து, வீடு தேடி போய், சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது சொந்தங்களையே கனம் பண்ணாத அம்மணி தான், மற்றவர்களுக்கு திறந்த மனதுடன் சேவை செய்ய போறார் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.