பூநகரி விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் வீட்டில் நெகிழ வைத்த நண்பர்கள்!

பூநகரியில் நேற்று டிப்பர் வாகனம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவனின் இறுதிச்சடங்கில் பலரையும் நெகிழ வைத்த படம் இது.

விளையாட்டில் ஆர்வமுள்ள அந்த மாணவனின் உருவப்படத்தை தயார் செய்து, அவர் விளையாட்டில் பெற்ற பரிசில்களை அதன் முன் காட்சிப்படுத்தியுள்ளனர் நண்பர்கள்.

மொரட்டுவ பல்கலைகழகத்தின் கணிய அளவியல் 3ஆம் வருட மாணவனான, பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியை சேர்ந்த மோகன் ஆகாஸ் (23) என்ற மாணவனே உயிரிழந்தார்.

யாழிலிருந்து மன்னார் நோக்கி சென்ற இளைஞனும், யாழ் வந்த டிப்பரும் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் மோதி விபத்திற்குள்ளாகியதில் மாணவன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.