சாலையின் குறுக்கே ஓடிய 3 வயது சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம்: பெற்றோர்களிடம் விக்கப்பட்டுள்ள கோரிக்கை!

வலஸ்முல்ல பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுவன் பலத்த காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயர் மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கிய குறித்த சிறுவன், சாலையின் குறுக்கே ஓடியபோது எதிரே வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி சிறுவன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் வலஸ்முல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை மோதிச்சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு, வலஸ்முல்ல நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற விபத்துக்களை தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இருக்கும் இடம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.