ராஜாங்கனை பகுதிக்கான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய கொரோனா தொற்றாளருடன் தொடர்புபட்ட மேலும் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த இராஜாங்கனை பகுதிக்கான பயணக் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை சுகாதார வைத்திய அலுவலர் பிரிவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளை கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் இரண்டு கட்டங்களின் கீழ் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையினால் இராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும் கடந்த 19ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இனங்காணப்படாத நிலையில் இராஜாங்கனை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக பயணக்கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.