கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60-65 வரை வீசும்

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60-65 வரையில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த கடலோரப் பகுதிகளில் அலைகளின் சீற்றம் இடைக்கிடையே அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுவோர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.