ஈழத்து இளைஞர் ஜெர்மனியில் மேற்கொண்ட விபரீத செயல்... துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்!

ஜெர்மனி நாட்டில் வசித்து வந்த வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் 02. 08.2020 நேற்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது.

ஜெர்மனி நாட்டில் பிறந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளார்.

இச்சம்பவத்தில் வேதகுரு கண்ணன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.